விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூபாய் 30 லட்சம் காப்பீட்டு தொகையை பெற்றுக் கொடுத்த காவல்துறையினர்.
12.03.2021.
தேனி மாவட்டம் அருகே முத்துதேவன்பட்டியை சேர்ந்தவர் முருகன்(37), இவர் தேனி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த நிலையில், கடந்த ஆண்டு சாலை விபத்தில் மரணம் அடைந்தார். அவருடைய குடும்பத்திற்கு காப்பீடு தொகை மூலம் ரூபாய் 30 லட்சத்துக்கான காசோலையை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் திண்டுக்கல் சரக DIG திரு முத்துசாமி IPS ஆகியோர் காவலர் குடும்பத்திற்கு பெற்றுக் கொடுத்தனர் .
அப்பொழுது SBI மேலாளர் திரு ராஜசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
