ஏ.டி.எம் மையத்தில் தவற விட்ட ரூ.1 லட்சம் பணத்தை உரியவரிடம் ஒப்படைக்க உதவியவர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள ஏ.டி.எம் மையத்தில் ரூ.1 லட்சம் பணத்தை யாரோ தவறி விட்டுச் சென்றதை கண்ட திரு.சுந்தரபாண்டி மற்றும் திரு.மகேந்திரன் ஆகிய இருவரும் அந்த பணத்தை எடுத்து கம்பம் வடக்கு காவல் ஆய்வாளர் திரு.சிலைமணி அவர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். பணத்தை தவறவிட்ட உரிமையாளரை அடையாளம் கண்டதில் திரு.பகவதிராஜ் என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரிய வந்ததையடுத்து அவரை நேரில் வரவழைத்து உரிய விசாரணைக்கு பின் ரூ.1 லட்சம் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தனர். ஏ.டி.எம் மையத்தில் கண்ட பணத்தை நேர்மையான முறையில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தவர்களின் செயலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய்சரண் தேஜஸ்வி இ.கா.ப., அவர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.