மதுரை, தெப்பக்குளம் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் ஆட்டோவில் வந்த நான்கு பேர் கைது
மதுரை மாநகர், தெப்பக்குளம் B 3, காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் 16/08/2020 அன்று காலை 10 மணியளவில் ஆய்வாளர் கனேசன் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. மதுரைவீரன் அவர்கள் நிலைய காவல் ஆளினர்களான சங்கர்குரு, செல்வம், தலைமை காவலர் 1119,
திரு. வரதராஜன், முதல் நிலைக் காவலர் 3365, திரு. அன்பு, முதல் நிலைக் காவலர் 2556, திரு. செந்தில், ஆகியோர்களுடன் குற்றத் தடுப்பு, கண்காணிப்பு, மற்றும் ரோந்து சென்ற போது,
காமராஜர் சாலை, கொண்டி தொழு தெரு, தென் கரையோர சந்திப்பில் TN 59 BE 4268 Bajaj Auto வில் சந்தேகப்படும்படியாக நான்கு பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்த போது
1) காமராஜபுரத்தை, சேர்ந்த முனியாண்டி மகன் வாசுதேவன்,வயது 23/2020,
2) கல்மேடு பகுதியை சேர்ந்த ராமர் மகன் அருள்முருகன் வயது 25/2020,
3) சிலைமானை சேர்ந்த பக்கீர் மகன் முகமது அசாரூதீன் வயது 26/2020,
4) கல்மேடு பகுதியை சேர்ந்த பெரியகருப்பன் மகன் வேலுச்சாமி வயது 55/2020, என தெரிய வந்தது. அதே சமயம் அவர்கள் வந்த ஆட்டோவை சோதனை செய்த போது ஆட்டோவின் பின் பக்கம் 3 வாள், மற்றும் ஒரு அரிவாள் போன்ற கொடிய ஆயுதங்கள் இருந்தன. மேலும் விசாரணையில் அவர்கள் சோழவந்தானை சேர்ந்த குணா என்பவரை கொலை செய்யப் போவதாக 1வது எதிரி வாசுதேவன் வாக்கு மூலம் கொடுத்தான், அதன் அடிப்படையின் ஆய்வாளர் கனேசன் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் மதுரைவீரன் அவர்கள்
Arms Act 25(1A), மற்றும் IPC 511 ன் படி வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்
மேற்படி சம்பவத்தில் மிக சிறப்பாக செயல்பட்ட காவலர்கள், சங்கர்குரு, மற்றும் செல்வம் ஆகியோரை மாநகர காவல் ஆணையர் நேரடியாக வரவழைத்து பாராட்டி பணவெகுமதி வழங்கி கெளரவித்தார்கள்.
போலீஸ் இ நியூஸிற்காக
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி