விருதுநகர் மாவட்டம்:-
*ராஜபாளையம் சுடுகாட்டில் எரிந்து கொண்டிருந்த பிணத்தின் மேல் மற்றொரு ஆண் பிணம் !பாதி எரிந்த நிலையில் போலீசார் மீட்டு விசாரணை*
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு பகுதியில் காயல்குடி சுடுகாடு உள்ளது.
இதில் 29 சமுதாயத்தினர் எரியூட்டும் சுடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த எட்டாம் தேதி மதியம் சோழராஜன் பட்டியை சேர்ந்த குமார் வயது 52 என்ற முடிதிருத்தும் தொழிலாளி மாரடைப்பால் உயிரிழந்தார் பிரேதத்தை எரியூட்டி சென்றனர்.
மாலையில் சுடுகாட்டு காவலர் வீடு சென்ற நிலையில்.
மறுநாள் காலையில் எரியூட்டப்பட்ட குமாரின் உறவினர்கள்
மறுநாள் சுடுகாட்டிற்கு வந்து இறந்தவரின் சாம்பலை எடுப்பதற்காக வந்துபார்த்தபோது
அதிர்ச்சியடைந்தனர்.
குமாரின் எரிந்த எலும்புக்கூடுக்கு மேல் சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் பாதி எரிந்த நிலையில் கிடந்தது.
இதுகுறித்து உடனே காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
ராஜபாளையம் வடக்கு போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பாதி எரிந்த நிலையில் கிடந்த சடலத்தின் வலது கால் முறிந்து காணப்பட்டநிலையில்.
சடலத்தின் மீது வளையல்கள் ஏராளமாக காணப்பட்டது இது கொலையா அல்லது காவல்துறையை திசைதிருப்பும் செயலா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
