வாகன சோதனையில் 21 கிலோ கஞ்சா பிடிபட்டது. மேலும் கஞ்சா கடத்திய நான்கு நபர்கள் கைது
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் IPS அவர்களின் உத்தரவின்படி மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் முள்ளீர்பாள்ளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளர் திருமதி. சீதாலெட்சுமி அவர்கள் தலைமையிலான போலீஸார் செங்குளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது சட்ட விரோதமாக நான்கு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த கொக்கிரகுளம் பகுதியை சேர்ந்த பேராட்சி, வயது 21, வசுவபுரம் பகுதியை சேர்ந்த ஆறுமுககனி வயது 25, ஶ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் வயது21, கே.டி.சி. நகரை சேர்ந்த தினேஷ் வயது 22, ஆகிய நான்கு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 21 கிலோ மதிப்பிலான கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்தனர்.