விருதுநகர் மாவட்டம்:-
இந்தியாவில் எத்தனை எத்தனை அரசுப்பணிகள் உள்ளன ஆனால் மக்களை எளிதில் தெரியக்கூடியதும், கவரக்கூடியதும், காவல்துறை.
பொதுமக்கள் அதிகம் பயணத்தில் விரும்புவது இரயில்பயணம்தான்.
அப்படி இரயில் பயணிப்போர் சங்கத்தினர் பலரும் குழுவாகத்திரண்டு நன்றாக பணியாற்றிவரும் காவல் ஆய்வாளர் ஒருவருக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் காவல்நிலையத்தில் பணியாற்றிவரும் திரு.பாலமுருகன் அவர்களுடைய மக்கள் பணியை பாராட்டி அருப்புக்கோட்டை இரயில் பயணிப்போர் சங்கத்தின் சார்பாக நினைவுபரிசு வழங்கப்பட்டது.
