SV கரை பகுதியில் அரிவாளால் தாக்கி காயப்படுத்திய நபர் கைது
தென்காசி மாவட்டம் SV கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஊர்மேலழகியான் பகுதியில் வசித்து வரும் சந்தோஷ்கனி என்பவரின் மகள் தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த போது, அதை பார்த்த பால்தினகரன் தன்னை பார்த்துத்தான் நக்கலாக சிரிக்கிறாள் என்று எண்ணி சந்தோஷ்கனியின் மகளை திட்டியுள்ளார். ஏன் என் மகளை திட்டுகிறாய் என்று கேட்டதற்கு அவரை அரிவாளால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
இது குறித்து சந்தோஷ்கனி கொடுத்த புகாரின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் திருமதி செல்வி அவர்கள் விசாரணை மேற்கொண்டு பால்தினகரன் மீது வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தார்.