Police Department News

கடையநல்லூர் அருகே கிணற்றில் மீட்கப்பட்ட ஐம்பொன் சிலை கோவிலில் இருந்து திருடப்பட்டதா?- போலீசார் விசாரணை

கடையநல்லூர் அருகே கிணற்றில் மீட்கப்பட்ட ஐம்பொன் சிலை கோவிலில் இருந்து திருடப்பட்டதா?- போலீசார் விசாரணை

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே போகநல்லூர் பஞ்சாயத்து பிள்ளையார் கோவில் தெருவில் பஞ்சாயத்துக்கு சொந்தமான பராமரிப்பு இல்லாத பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது.

அந்த கிணற்றை நேற்று பஞ்சாயத்து சார்பில் சுத்தம் செய்யும் பணி நடந்தது. அப்போது அந்த கிணற்றில் கூஜாவும், ஐம்பொன் சிலையும் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே தூய்மை பணியாளர்கள் போகநல்லூர் பஞ்சாயத்து தலைவருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர் சொக்கம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அங்கு விரைந்து சென்று சிலையை மீட்டு, கடையநல்லூர் தாசில்தார் சண்முகத்திடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மற்றும் அண்டை மாவட்டங்களில் இந்த வடிவமைப்பிலான சிலை எந்த கோவில்களிலும் கிடையாது. இதனை வெளி மாவட்டங்களில் இருந்து யாரேனும் திருடி வந்து இந்த கிணற்றில் பதுக்கி வைத்து இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தொடர்ந்து பல்வேறு கோணங்களில் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.