Police Department News

மழையிலும் மக்களுக்கு பாதுகாப்பு மறைமலைநகர் போக்குவரத்து ஆய்வாளர் ஐயா திரு.ஹேமந்த்குமார்

மழையிலும் மக்களுக்கு பாதுகாப்பு மறைமலைநகர் போக்குவரத்து ஆய்வாளர் ஐயா திரு.ஹேமந்த்குமார்

மதிப்பிற்குரிய டிஜிபி திரிபாதி ஐபிஎஸ் அவர்கள் மற்றும் சென்னை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ் அவர்கள் ஆகியோரின் ஆணைக்கிணங்க ஆங்காங்கு தொடர்ந்து கொரோனா விழிப்புணர்வு நடைபெறுவதையொட்டி மறைமலைநகர் போக்குவரத்து ஆய்வாளர் திரு ஹேமந்த் குமார் மற்றும் மறைமலை நகர் போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு.சுந்தரமூர்த்தி மற்றும் HC தேவநாதன் அவர்கள் தினம்தோறும் எஸ்பி கோயில் ஜிஎஸ்டி சாலையில் வாகன தணிக்கையின் போது வாகன ஓட்டிகளிடம் முக கவசம் ஹெல்மெட் அரசாங்க ஆவணங்கள் மற்றும் கொரோனா விழிப்புணர்வு போன்றவைகளை மக்களின் நலனுக்காக பல அறிவுரைகளை சாலைகளில் நின்று வழங்கி வருகின்றனர். அதிக விபத்து ஏற்படும் பகுதியில் இரவு நேரத்தில் வரும் வாகனத்தின் கவனத்திற்காக பிரதிபலிக்கும் ஒளி விளக்குகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பெண்களுக்கான சாலை விதிகளைப் பற்றியும் இரண்டு மூன்று பேர் பயணிக்கும் பயணிகளிடம் சமூக இடைவெளி பற்றியும் மற்றும் தங்களுடைய ஊதியத்தில் உணவும் வழங்கி மனித நேயமிக்க செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி அதிவிரைவு சாலையான ஜிஎஸ்டியில் உயிரைப் பணயம் வைத்து பொதுமக்களுக்கு சேவை என்று கருதாமல் தங்களுடைய குடும்பத்தையும் பாராமல் தியாகமாக காவல் பணியை நேர்மையாகவும் அன்பாகவும் செய்து வருகின்றனர். இவர்கள் போக்குவரத்து காவல்துறையினருக்கு உதாரணமாக விளங்கி
வருகிறார்கள் என்று அங்கு செல்லும் வாகன ஓட்டிகள் அப்பகுதி மக்கள் கூறிவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.