பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்று வாலிபர் நடுரோட்டில் வெட்டி படுகொலை..!!!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சி புரத்தில் திருவாடானை அருகே எஸ் வி மங்கலத்தைச் சேர்ந்த மெக்கானிக் விக்னேஷ் என்பவர் தன் நண்பருடன் காரைக்குடி வ உ சி ரோட்டில் உதிரி பாகங்கள் வாங்கிக்கொண்டு மீனாட்சி அம்மன் கோவிலை நோக்கி சென்று கொண்டிருக்கும் பொழுது மீனாட்சிபுரம் மூவி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே வேறு ஒரு இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மூன்று நபர்கள் விக்னேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். விக்னேஷ் உடன் பயணம் செய்த நண்பரரையும் கொலை செய்யும் நோக்கில் விரட்டி யிருக்கிறார்கள். அவர் தப்பி ஓடி உயிர் பிழைத்து விட்டார். வெட்டிய 3 நபர்களும் தங்களுடைய இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோஹித்நாதன் இராஜகோபால் சம்பவ இடத்திற்கு நேரில்வந்து ஆய்வு செய்து. தீவிர விசாரணை செய்து வருகிறார்.
