
புதுசேரியில் ஹெல்மெட் கட்டாயம் போக்குவரத்து போலீசார் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு
விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புக்களை குறைக்கவும் போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைபிடிக்கவும் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகளை புதுசேரி போலீசார் எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் வாகனங்களின் பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என்ற உத்தரவு அமுலுக்கு வரவுள்ளது.
இதற்காக கிருமாம்பாக்கம் தெற்கு பகுதி போக்குவரத்து போலீசார் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் ஹெல்மெட் கட்டாயம் குறித்து பொதுமக்களிடையே எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் இதனை கண்காணிக்க பல்வேறு இடங்களில் போக்குவரத்து போலீசார் சோதனையில் ஈடுபடுவார்கள்
ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கைகாள் எடுக்கப்படும் எனவும் இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் இருப்பவர்களும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் போக்கு வரத்து காவல் துறை எச்சரித்து வருகிறது.
