ஏரல் அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
சிறுமி திருமணம்
தூத்துக்குடி மாவட்டம், ஏரல், சிவகளை நயினாா்புரத்தைச் சோ்ந்த முனியாண்டி மகன் முனீஸ்வரன்(வயது 24). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவா் அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த 17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் கடம்பூா் அனைத்து மகளிா் போலீசார் வழக்குப் பதிந்து, முனீஸ்வரனை போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தனா்.
