கோட்டூர் மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை J2 காவல்துறை ஆய்வாளர் திரு. சேகர்(சட்டம் ஒழுங்கு) அவர்கள் தலைமையில் கோட்டூர் மாற்று திறனாளிகள் சார்பாக வழங்கப்பட்டது.
கொரோனா முழு ஊரடங்கு நேரத்தில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் திரு. சங்கர் ஜிவால் வழிக்காட்டலின் படி ஆங்காங்கே ஆதரவற்றோர் மற்றும் மாற்று திறனாளிகள் சாலையில் வசிப்போருக்கு உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் மாஸ்க் மற்றும் மருத்துவப் பொருட்கள் போன்றவை வழங்கி வருகிறார்கள்.இப்படி கோட்டூர்புரம் மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி பருப்பு காய்கறிகள் எண்ணெய் மற்றும் மளிகை பொருட்கள் ஆகிய நலத்திட்ட உதவிகளை சென்னை பெருநகர அடையாறு காவல்துறை ஆய்வாளர் J2 (சட்டம் ஒழுங்கு)திரு.சேகர் அவர்கள் தலைமையில் கோட்டூர் மாற்று திறனாளிகள் சங்கம் சார்பாக வழங்கப்பட்டது.