


மதுரை S.ஆலங்குளம் பகுதியில் 18 வது வார்டு பொதுமக்களூக்கு பொங்கல் பரிசு
தமிழக மாண்புமிகு முதலமைச்சரின் ஆணைப்படி மற்றும் மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி அவர்களின் அறிவுறுத்தலின்படி மதுரை மாநகராட்சி 18-வது வார்டு உள்ள நியாய விலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000/- ரொக்கத் தொகையுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ஆனையூர் பகுதி தி.மு.க கழக செயலாளர் திரு. மருது பாண்டியன் தலைமையிலும் மற்றும் 18 வது வார்டு மாமன்ற உறுப்பினர் திரு. நவநீத கிருஷ்ணன் முன்னிலையிலும் வழங்கப்பட்டது
