மதுரை நகரில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டாலும், பெரும்பாலான குற்றச் செயல்களில் ஏற்கெனவே குற்றம் புரிந்த நபர்களே திரும்பத் திரும்ப ஈடுபடுவது தெரிகிறது.
குறிப்பாக ரவுடி பட்டியல்களில் இடம் பெற்றுள்ளவர்கள் தங்களது கோஷ்டிக்கு வலுச் சேர்க்க, ஆடம்பரத்தை விரும்பும் இளைஞர்களுக்கு ஆண்ட்ராய்டு செல்போன் போன்றவையை வாங்கிக் கொடுத்து வளைத்துப் போடுவதும் தெரியவருகிறது.
இவர்களில் பெரும்பாலும் 18 வயதுக்குட்பட்டோர் அதிகமிருப்பதும் தெரிகிறது. இவர்களை முதலில் சிறிய குற்றச் செயல்களை ஈடுபடுத்தி தங்களது நிரந்தர கூட்டாளிகளாக மாற்றுகின்றனர். குரூப் தலைவனாக செயல்படும் ரவுடிகள் குற்றம் புரிந்து தலைமறைவாக இருக்கும் போதும், சிறைகளில் அடைக்கப்படும்போதும், வெளியிலுள்ள கூட்டாளிகள் மூலம் ஜாமின் எடுப்பது, பண உதவியை ஏற்பாடு உள்ளிட்ட தங்களுக்கான காரியங்களை நிறைவேற்றுவது என்பது வழக்குகளில் சிக்கும் ரவுடிகளின் கூட்டாளிகள் மூலம் கண்டறியப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் காவல் ஆணையராக பொறுப்பேற்ற பிரேமானந்த் சின்கா ஆய்வில், சென்னை போன்ற பெரும் நகரங்களுக்கு இணையாக மதுரையில் ரவுடிகள், குற்றச்செயல் புரிவோர்அதிகரிப்பதை உணர்ந்தார்.
இவர்களை ஒடுக்கி, குற்றச் சம்பவங்களை குறைக்க திட்டமிட்டார். ரவுடிகள், அவர்களின் கூட்டாளிகளின் தகவல்களை ஒருங்கிணைக்கும் வகையில் பட்டியல் ஒன்றை தயாரிக்க உத்தரவிட்டார்.
இதன்படி, ரவுடிகள், அவர்களின் கூட்டாளிகள் யார், இவர்களின் குற்றச்செயல்கள் என்ன, தற்போதை நிலை போன்ற பின்னணி விவரங்களை கொண்டு கண்காணித்து, அவர்கள் குற்றச் செயல்களை தடுக்க, தனது நண்பர் ஒருவரின் உதவியோடு புதிய செயலி ஒன்றை ஆணையர் உருவாக்கியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘‘ கடந்த 2 மாதத்தில் செய்த ஆய்வின் அடிப்படையில் 25-க்கும் மேற்பட்ட ‘ஆக்டிங்’ ரவுடிகள் மதுரையில் இருப்பது தெரிகிறது. இவர்கள் ஒவ்வொருவரின் தலைமையிலும் 50 முதல் 60 பேர் வரை கூட்டாளிகளாக செயல்படுகின்றனர். 50 சதவீதத்தினர் சுமார் 25 வயதுக்குள் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இவர்களின் பல்வேறு தகவல் களை அடங்கிய புதிய செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள் ளது. இதற்காக 25 ரவுடிகள், அவர்களின் கீழ் செயல்படும் கூட்டாளிகள் குறித்த குற்றப் பின்னணி, முந்தைய, தற்போதைய செயல்பாடு போன்ற பல்வேறு விவரங்களை காவல் நிலையம் வாரியாக சேகரித்து, செயலில் பதிவிட்டுள்ளோம்.
இதன்மூலம் போலீஸில் சிக்கும் ரவுடிகள் பழைய குற்றவாளிகள் குற்ற பின்ன ணிகளை ஓரிரு நிமிடத்தில் அறியலாம். புதிதாக வழக்கில் சிக்குவோர் யாருடைய கூட்டாளிகளாக எனக் கண்டறியலாம். சம்பந்தப்பட்ட பெயர், ஏதாவது பழைய குற்ற எண்களை (க்ரைம் நம்பர்) குறிப்பிட்டால் எல்லா தகவல்களும் இச்செயலியால் தெரிந்து கொள்ள முடியும்.
காவல் நிலையம் வாரியாக தகவல் சேகரிக்க வேண்டியதில்லை. சில முக்கிய காவல்துறை அதி காரிகள் இச்செயலியை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்ப ரீதியிலான இந்த நடவடிக்கை நகரில் குற்றச் சம்பவங்களைக் குறைக்கும் என நம்புகிறோம்,’’ என்றார்