Police Department News

நெல்லை காவலர்களின் மனித நேயம்

நெல்லை காவலர்களின் மனித நேயம்

நெல்லை காவலர்களின் மனிதநேயத்தை பாராட்டாமல் இருக்க முடியாது
நேற்று முன்தினம் இரவு சுமார் ஒரு மணி அளவில் கேடிசி நகர் செக்போஸ்டில் நெல்லை மாநகர சந்திப்பு போக்குவரத்து பிரிவில் பணிபுரிந்து தற்போது பறக்கும் படையில் தேர்தல் பணி செய்து கொண்டிருக்கும் பொழுது மார்த்தாண்டம் அவர்களின் உதவியுடன். மனநிலை சரியில்லாத ஒரு இளம்பெண் வழிதவறி சென்று கொண்டிருந்ததை பார்த்து மனிதநேயத்துடன் அந்தப் பெண்மணியை அழைத்து அந்த இளம்பெண்ணுக்கு சாப்பாடு தண்ணீர் அனைத்தும் அந்தப் பெண்ணுக்கு கொடுத்து பாதுகாப்பு உதவி செய்த.

பாளையங்கோட்டை காவல் நிலைய பெண் தலைமை காவலர் முத்துலட்சுமி. மற்றும் நெல்லை மாநகர ஆயுதப்படை தலைமை பெண் காவலர் முத்தம்மாள். அவர்களுடன் நெல்லை மாநகர ஆயுதப்படை முதல் நிலை பெண் காவலர் சுபிதா.மற்றும் ஆயுதப்படை காவலர்கள் அனைவரும் சேர்ந்து ..அந்த இளம்பெண்ணை பாதுகாப்பாக அழைத்து அரசு மருத்துவமனையில் இயங்கி வரும்
சக்தி ஒன் ஸ்டாப் சென்டரில் ஒப்படைத்துள்ளனர் .இரவுநேர அயராத பணியிலும் மனிதநேயத்துடன் செயல்பட்ட காவல்துறையினருக்கு சமுக வளைதளத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன .
வழி மாறி வந்த அந்த இளம்பெண்ணின் பெயர் முத்து மாரி. ஊர் நாசரேத் அருகில் என்று சொல்லியிருக்கிறார் ..முழு விவரம் தெரியவில்லை .. இந்த தகவலை பார்ப்பவர்கள் அந்தப் பெண்ணின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்குப்படி காவல்துறையினரால் கூறப்பட்டுள்ளது
இதற்கு உறுதுணையாக இருந்து உதவிசெய்த தலைமை காவலர் மார்த்தாண்டம் மற்றும் உடனிருந்த காவல்துறையினர் நெல்லை சோயா ட்ரஸ்ட் ஆகியோருக்கு சமுக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மனித நேயத்தோடு இந்த உதவிகளை செய்த நெல்லை போலீசாரின் மனிதநேய செயலுக்கு போலீஸ் இ நியூஸ் சார்பாக வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published.