ஒத்திப் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றிய ஆசாமி மீது அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் ஆய்வாளர்
மதுரை ஆரப்பாளையம் பகுதியில் ஒத்திப் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியவருக்கு, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 406, 420, 294(b), 506(i) ஆகிய பிரிகளில் வழக்கு பதிந்து, மதுரை காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்களின் உத்தரவின்படி மதுரை, கரிமேடு காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் நடவடிக்கை எடுத்து எதிரியை கைது செய்து, நீதி மன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தார்,
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 406
குற்றமுறு நம்பிக்கை மோசடிக்கு தண்டனை.
3 ஆண்டுகள் வரை நீடிக்க கூடிய ஒரு கால அளவிற்கு சிறைத்தண்டனை வகைகள், இரண்டில் ஒன்றோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும்.
இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 420
ஏமாற்றுதலும், பொருளை கொடுப்பதற்கு நேர்மையற்ற முறையில் இணங்கச் செய்தல்,. இதற்கு தண்டனை 7 ஆண்டுகள் வரை நீடிக்க கூடிய ஒரு கால அளவிற்கு சிறைத்தண்டனை வகைகள் இரண்டில் ஒன்று விதித்து தண்டிக்கபடுதல் வேண்டும், மற்றும் அவரை அபராதத்திற்கு உள்ளாக்கவும் செய்யலாம்.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு294(b),
ஆபாச செயல்களும், ஆபாசமான வார்த்தைகள் கூறி திட்டுதலுக்கு மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதித்து தண்டிக்கபடுதல் வேண்டும்.
இந்திய தண்டனைச் சட்டம் 506(i)
குற்றமுறு மிரட்டலுக்கு தண்டனை 2 ஆண்டுகள் வரை நீடிக்ககூடிய ஒரு கால அளவிற்கு சிறைத் தண்டனை வகைகள் இரண்டில் ஒன்றோ, அல்லது அபராதமோ விதித்து தண்டிக்கபட வேண்டும்.
