Police Department News

டாக்டர்களை தாக்கினால் 5 ஆண்டு சிறை; சட்டம் நிறைவேறியது

டாக்டர்களை தாக்கினால் 5 ஆண்டு சிறை; சட்டம் நிறைவேறியது

டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களை தாக்கினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் வகையில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. தொற்றுநோய் சட்டத்தின் மூலம் டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்துவோர் கைதானால், அவர்களுக்கு ஜாமின் வழங்கப்படாமல் 3 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். மேலும் ரூ 50 ஆயிரம் முதல் ரூ 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

தொற்றுநோய் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின் மத்திய மந்திரி ஹர்ஷ வர்தன் பேசும்போது, “கடந்த ஏப்ரல் மாதம் 22-ந் தேதி இது தொடர்பாக அவசர சட்டம் கொண்டுவரப்பட்ட பின் டாக்டர்கள் செவிலியர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அடியோடு குறைந்திருக்கிறது. தற்போது இந்த சட்ட திருத்தம் மூலம் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யப்பட்டு உள்ளது.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published.