மதுரை, ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து வழிப்பறி செய்த ரவுடி கைது
மதுரை, ஜெய்ஹிந்த்புரம், B6, காவல் நிலையம் சரகத்திற்குட்பட்ட பகுதியான ஜெய்ஹிந்த்புரம், பாரதியார் ரோடு, பூமிநாதன் காம்பவுண்டில் தன் குடும்பத்தோடு வசித்து வருபவர், துரைச்சேர்வை மகன் பால்போண்டி வயது 39/2020,
22/09/2020 ம் தேதி காலை 9 மணியளவில் ஜெய்ஹிந்தபுரம், பாரதியார் தெரு, குருகுலம் பள்ளி அருகில் பால்பாண்டி அவர்கள் நின்று கொண்டிருந்த போது ஒரு நபர் அங்கே வந்து பால்பாண்டியிடம் கஞ்சா வாங்கவும், ஜாலியாக செலவு செய்யவும் பணம் கேட்டுள்ளார், பால்பாண்டி பணம் தர மறுக்கவே, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பால்பாண்டி வயிற்றில் வைத்து அழுத்திக் கொண்டே சத்தம் போட்டால் குத்தி விடுவேன் என்று மிரட்டிக்கொண்டே அவர் பையில் இருந்த 700/ −ரூபாயை எடுத்துக்கொண்டு யாராவது என்னை பிடிக்க வந்தால் குத்தி கொலை செய்து விடுவேன் என மிரட்டிக்கொண்டே ஓடி விட்டான், அதன்பின் பணத்தை பறிகொடுத்த பால்பாண்டி ஜெய்ஹிந்த்புரம் B6, காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தை புகார் கொடுத்தார், புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறையினர் விசாரணை செய்த போது பணத்தை பறித்துக்கொண்டு ஓடின ரவுடி அனுப்பானடி பகுதியை சேர்ந்த செந்தில் மகன் கண்ணன் என்ற சைக்கோ கண்ணன் வயது 22/2020, என தெரிய வந்தது. அதன்பின் ஆய்வாளர் R. எஸ்தர் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் C.சோமசுந்தரம் அவர்கள் IPC U/S 392 r/w397, 506(ii) பிரிவின்படி வழக்கு பதிந்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி, அதன் பின் நீதி மன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்
