சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டவர் கைது
திருநெல்வேலி
24 .09.2020
திருக்குறுங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாவடி பகுதியில் உதவி ஆய்வாளர் திரு சிவகுமார் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது மாவடி ஆற்று விளை தெரு பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக பைக்கில் வைத்து மணல் திருட்டில் ஈடுபட்ட மாவடியை சேர்ந்த ரகுராம்(24) என்பவரை மடக்கிப்பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். மேலும் 10 சாக்கு மூட்டை மணல் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்தனர்.
