பொன்னேரியே அடுத்துள்ள பழ
வேற்காட்டில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் பெட்ரோல் பங்க் உள்ளது. சில நாட்களுக்கு முன், பைக்கில் பெட்ரோல் போட வந்த 2 பேர், அங்கிருந்த ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.30 ஆயிரத்தை பறித்து சென்றனர். புகாரின்படி திருப்பாலைவனம் இன்ஸ்பெக்டர் மகிதா கிருஷ்டி, வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். அதில், பொன்னேரி அடுத்த காவல்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (21). மீஞ்சூர் அடுத்த தோட்டக்காடு மேட்டு காலனியை விஷ்ணு (22) ஆகியோர் என தெரிந்தது. இதையடுத்து போலீசார், அவர்களை, நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்களை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.