கூடுதல் காவல் துறை இயக்குனர் (தலைமையிடம்), அவர்கள் தலைமையில் சென்னை பெருநகர காவலில் உள்ள குழந்தைகள் நல காவல் அதிகாரிகளுக்கு 2ம் நாள் பயிற்சி அளிக்கப்பட்டது ..
கூடுதல் காவல் துறை இயக்குநர் (தலைமையிடம்) திருமதி. சீமா அகர்வால், இ.கா.ப. அவர்களின் தலைமையில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப. அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் இளம் சிறார் நீதிச்சட்டம் (பராமரிப்பும் பாதுகாப்பும்)-2015, பாலியல் குற்றங்களிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்-2012 மற்றும் குழந்தைகளுக்காக இதர சட்டங்களில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்ற தெற்கு மண்டல குழந்தைகள் நல காவல் அதிகாரிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி அளிக்கவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்புப் பிரிவின் துணை ஆணையாளர் திருமதி.எச்.ஜெயலஷ்மி அவர்கள் மேற்பார்வையில் இன்று (26.09.2020) 2வது நாள் பயிற்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில், குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர்களான திருமதி.இசபெல், திரு.பிரான்சிஸ் சேவியர் ஆகியோர் கலந்து கொண்டு, விழிப்புணர்வு பதாகைகள், வில்லைகள், துண்டு பிரசுரங்கள் ஆகியவற்றை குழந்தைகள் நல காவல் அதிகாரிகளுக்கு வழங்கியும் Child Welfare Committee (CWC) மற்றும் காவல் அலுவலர்களுக்கான நடைமுறைகள் குறித்து விளக்கியும், திருமதி.ஆதிலஷ்மி, வழக்கறிஞர் மற்றும், ஆன்ட்ரு ஜேசுராஜ், டேவிட் ஆகியோர் குழந்தைகளுக்கான சட்டங்கள் குறித்தும் நடைமுறைகள் குறித்தும் பயிற்சி அளித்தனர்.
மேலும், திருமதி.சண்முகப்பிரியா (தலைவர்-JJB), திருமதி.ரேகா (LPO) திரு.ஆண்ட்ரூஸ் அபிரகாம், திருமதி.வித்யா ரெட்டி, திருமதி.சூரியகலா (DCPO), திருமதி.தமிழ்செல்வி (CWC), திருமதி.ரேச்சல், Dr. கோமளா ஆகியோர் குழு உரையாடலில் கலந்து கொண்டு, குழந்தைகளுக்கான சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூடுதல் காவல் இயக்குநர் திருமதி. சீமா அகர்வால், இ.கா.ப. அவர்கள், இப்பயிற்சியில் ஒரு பகுதியான குழு விவாதத்தில் கலந்து கொண்டு குழந்தைகள் நல காவல் அதிகாரிகள் குழந்தைகள் நலத்துடன் தொடர்புடைய இதர துறையினருடன் இணைந்து எவ்வாறு பணிபுரிய வேண்டும் என்பதனை விளக்கி சிறப்புரை ஆற்றினார்.
2ம் நாள் பயிற்சியின் நிறைவு பகுதியாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவின் துணை ஆணையாளர் திருமதி.எச்.ஜெயலஷ்மி அவர்கள் நன்றியுரை வழங்கி நிறைவு செய்து, நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பித்த அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
