Police Department News

14 ரவுடிகளின் சொத்துக்களை முடக்க போலீசாருக்கு உத்தரவு, 102 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது

14 ரவுடிகளின் சொத்துக்களை முடக்க போலீசாருக்கு உத்தரவு, 102 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது

மதுரையில் இரு நாட்களாக மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் சட்ட ஒழுங்கு, குற்றங்கள் தடுப்பு குறித்து காவல் அதிகாரிகளுடன் டி.ஜி.பி., சங்கர் ஜிவால் ஆலோசனை நடத்தினார்

நேற்று போலீசாரின் குறைகளை கேட்டு அறிந்ததோடு, சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசுத்தொகை, சான்றிதழ் வழங்கினார்

போலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் முதல் நாள் நடந்த ஆய்வு கூட்டத்தில் கொலை, கொலை முயற்சி, கொடுங்காயம், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், மற்றும் ரவுடிகளின் மீதான நடவடிக்கைகளை ஆய்வு செய்தார் ரவுடிகளின் சொத்துக்களை முடக்க உத்தரவிட்டார்

போக்சோ வழக்குகளில் விடுதலை அளிக்கப்பட்ட வழக்குகளை ஆய்வு செய்து தீர்ப்புகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அறிவுறுத்தினார்
போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளதாவது மதுரை நகரில் 28 ரவுடிகளுக்கும் மாவட்டத்தில் 30 ரவுடிகளுக்கும் இரு ஆண்டுகளில் தண்டனை வாங்கி தரப்பட்டுள்ளது நகரில் 8 ரவுடிகள் மாவட்டத்தில் ஆறு ரவுடிகள் தொடர்புடைய சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்
நகரில் 445 ரவுடிகள் மீது நன்னடத்தை பிணையம் பெறப்பட்டது அதில் 25 பேர் நிபந்தனையை மீறியதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது
89 ரவுடிகள் குண்டர் சட்டத்தின் கைது செய்யப்பட்டனர் 10 ரவுடிகளுக்கு ஆயுள் தண்டனை 18 ரவுடிகளுக்கு கடுங்காவல் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது மாவட்டத்தில் 385 ரவுடிகளிடம் நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டது நிபந்தனையை மீறிய 11 ரவுடிகளுக்கு பிணை ரத்து செய்யப்பட்டது 13 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர் 15 ரவுடிகளுக்கு ஆயுள் தண்டனையும் ஒரு ரவுடியின் மீது கடுங்காவல் தண்டனையும் பெற்றுத் தரப்பட்டது

நகரில் பறவை திட்டத்திற்கு கீழ் 18 முதல் 24 வயது உடைய முதல் முறை தவறு செய்த 66 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களின் ஒருவர் தொழிற்பயிற்சி பள்ளியிலும் இருவர் தனியார் நிறுவனத்திலும் சேர்க்கப்பட்டனர் 31 பேருக்கு படிக்க ஏற்பாடு செய்யப்பட்டது 32 பேருக்கு தனியா நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்று தரப்பட்டது

பின்னர் மதுரை நகர் புறநகரை சேர்ந்த 163 போலீஸ் அதிகாரிகள், போலீசாரின் குறைகளை டி.ஜி.பி., கேட்டறிந்தார் சிறப்பாக பணியாற்றியதற்காக 28 போலீசாருக்கு சான்றிதழ், பரிசுத்தொகை வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் கமிஷனர் லோகநாதன், தென் மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்கா, எஸ். பி., அரவிந்த் ஆகியோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published.