மதுரை, மீனாட்சியம்மன் கோவில் மேலக்கோபுரம் பகுதியில் 385 கிலோ எடையுள்ள புகையிலை குட்கா வைத்திருந்த மூன்று பேர் கைது 385 கிலோ புகையிலை குட்கா பொருட்கள் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்
மதுரை, மீனாட்சியம்மன் கோவில் மேல கோபுரம் பகுதிகளில் புகையிலை குட்கா விற்பனை செய்து வருவதாக மதுரை மாநகர் காவல் துணை ஆணையர் அவர்களின் தனிப்படைக்கு தகவல் கிடைத்தது. இதன் தொடர்ச்சியாக தனிப்படையினர் மீனாட்சியம்மன் கோவில் மாசி வீதிகளிலும் மேலக்கோபும் பகுதிகளிலும் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது மேலக்கோபும் பகுதியில் டீ கடை நடத்தி வந்த கண்ணன் என்பவருடைய கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது, அதன்தொடர்ச்சியாக கண்ணன் என்பவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்திய போது சையது மீரான், காதர் மைதீன் ஆகிய இரண்டு பேரின் உதவியோடு புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக ஒப்புக்கொண்டார் இதன் தொடர்ச்சியாக இவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல் துறை துணை ஆணையரின் தனிப்படையினர் மேலவளவு பகுதியில் உள்ள ஒரு குடோனில் மறைத்து வைத்திருந்த 385 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் தொடர்ச்சியாக மூன்று பேரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.