பாலியல் உல்லாசத்திற்கு அழைத்த கார்மெண்டஸ் மேலாளரை முகத்தில் மிளகாய் பொடி தூவி உதைத்த மதுரை பெண்கள்
ஈரோடு மாவட்டம், பெருந்துறையிலுள்ள ஒரு பனியன் கார்மெண்ட்ஸில் மேனேஜராக பணி புரிந்து வருபவர் சிவகுமார், இங்கு இந்த கம்பெனியில் மதுரையிலிருந்தும், மற்றும் உள்ளூர்,வெளியூர் பெண்கள் பல பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
இங்கு மேனேஜர் சிவகுமார் இளம் பெண்களிடம் தவறாக நடந்து வருவதாக கூறப்படுகிறது, மதுரையை சேர்ந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அந்த பெண்ணின் வாட்ஸ் அப் நம்பருக்கு அனுப்பி, உல்லாசத்திற்கு வர வேண்டும், இல்லையென்றால் அந்த படத்தை சமூக வளைதளங்களில் பரப்பி விடுவதாக மிரட்டியுள்ளார் இதனால் அஞ்சிய அந்த இளம் பெண் சில நாட்களுக்கு முன்
மேலாளர் சிவகுமாரை பல்லடம் அருகேயுள்ள பச்சாம்பாளையம் காட்டுப்பகுதிககு அழைத்து சென்றார், அங்கு அவர் அந்த பெண்ணிடம் அத்து மீற முயற்ச்சித்த போது தன் கைவசம் வைத்திருந்த பெப்பர் ஸ்ரேயரை பயன்படுத்தியும், மற்றும் மிளகாய்ப் பொடியை முகத்தில் தூவி, அவரை கட்டிப்போட்டு சரமாரியாக மிதித்துள்ளனர், அங்கேயே தனக்கு உதவ வேண்டுமென ஏற்கனவே கூறி வைத்திருந்த பெண்ணும் உதவிக்கு வரவே, அந்த மேலாளரை இருவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் , மேலாளரும் அந்த பெண்கள் மீது புகார் அளித்துள்ளார் இந்த புகாரின் அடிப்படையில் இரண்டு பெண்களையும் கைது செய்தும், மேனேஜர் சிவகுமாரையும் விசாரித்து வருகின்றனர்.
