மதுரை, பெருங்குடியை சேர்ந்த ராஜேஸ் என்பவரின் மனைவி கனிமொழி, வில்லாபுரத்தைச் சேர்ந்த கள்ளக் காதலன் ஜிம் பயிற்சியாளர் யோகேஸ் கண்ணாவுடன் ஓட்டம், காவல் துணை கண்காணிப்பாளர் வினோதினி அவர்கள் விசாரணை
மதுரை மாவட்டம், பெருங்குடியில் வசித்து வருபவர் ராஜேஸ் வயது 26, இவர் கனிமொழி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார், இவர் தற்போது மதுரை விமான நிலையத்தில் எக்ஸிக்யூட்டிவ் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு குழந்தை இல்லை, கனிமொழிக்கு கர்பபையில் நீர் கட்டி இருப்பதால் அதை நீக்குவதற்காக மதுரை, வில்லாபுரத்தில் உள்ள யோகேஸ் கண்ணா என்பவர் நடத்தும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி மேற் கொண்டார். அங்கே யோகேஸ் கண்ணாவிற்கும், கனிமொழிக்கும் பழக்கம் ஏற்பட்டது இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது, இந்த விபரம் கணவர் ராஜேஸ் அவர்களுக்கு தெரியவரவே அவர் மனைவியை கண்டித்து தொடர்பை கைவிட கூறியுள்ளார், அதன்பிறகும் அவர்களின் காதல் தொடர்ந்தது, இதற்கிடையே ஒரு நாள் யோகேஸ் கண்ணா
தனது நண்பர்களுடன், ராஜேஸ் வீட்டிற்கு வந்து ராஜேஸை மிரட்டி அவரது மனைவியை கடத்தி சென்றுள்ளார். இதனால் மனம் உடைந்து போன ராஜேஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், புகாரில் தன் மனைவியை திருப்பி அனுப்ப வேண்டுமானால் பணம் தர வேண்டும் என்று கூறியுள்ளதாக கூறியுள்ளார் மேலும் தனது மனைவியை மீட்டுத்தரும்மாறு கேட்டுள்ளார், இதனைத் தொடர்ந்து துணை காவல் கண்காணிப்பாளர் வினோதினி அவர்கள் ராஜேஸ், அவரது மனைவி கனிமொழி, உடற்பயிற்சி சாலை உரிமையாளர் யோகேஸ் கண்ணா ஆகியோரை அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்.
கர்ப்பபையில் உள்ள நீர் கட்டியை கரைக்க ஜிம்மிற்கு சென்ற பெண்ணை ஜிம் மாஸ்டர் கவர்ந்து சென்றது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
