ஊத்தங்கரையில் காவல்துறை சார்பில் நல உதவிகள்.
கொரனோ தொற்று நோய் பரவலை தடுக்க விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஊத்தங்கரையில் வசிக்கும் திருநங்கைகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ பாண்டியன் தலைமை தாங்கினார். ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். பெருகோபனபள்ளி ஊராட்சி மன்ற தலைவர் முரளிதரன் அரிசி காய்கறி பழங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திருநங்கைகளின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அவர்களின் வாழ்வு முற்றிலும் வருமானமின்றி வீட்டில் உணவுக்கு பஞ்சம் நடமாடும் அளவுக்கு சூழ்நிலை மோசமாகியுள்ளது. நல உதவிகளை பெற்றுக் கொண்ட திருநங்கைகள் ஊத்தங்கரை டிஎஸ்பி ராஜபாண்டியன் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி
பெருகோபனபள்ளி ஊராட்சி மன்ற தலைவர் முரளிதரன்
ராஜா ஜெயலட்சுமி , கோவிந்தராஜ், ராஜ்பாபு, ரமேஷ் மற்றும் காவல் துணை ஆய்வாளர்கள் காவலர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர் .