Police Department News

மதுரை, கீழ மாரட் வீதி பகுதியில், சாமிக்கு சூடம் ஏற்றும் போது, சூடம் தவறி விழுந்து 92 வயது, மூதாட்டி தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்

மதுரை, கீழ மாரட் வீதி பகுதியில், சாமிக்கு சூடம் ஏற்றும் போது, சூடம் தவறி விழுந்து 92 வயது, மூதாட்டி தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்

மதுரை மாநகர்,விளக்குத்தூண் B 1, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான கீழ மாரட் வீதி டோர் நம்பர் 208,ல் வசித்து வருபவர்கள், M.பத்மினி, வயது 70, அவரது கணவர் மோஹன் , மற்றும் பத்மினி அவர்களின் தாயார் பிரஹதாம்பாள், வயது 92, இன்நிலையில் ஒரு மாதத்திற்கு முன் பத்மினியின் இளைய மகள் பிரசித்தா பேறு காலத்திற்காக வந்திருந்தார். பத்மினியம்மாளின் தாயார் பிரஹதாம்பாள் தினந்தோறும் மாலையில் சூடம் ஏற்றி சாமி கும்பிடுவது வழக்கம், இவர் வழக்கம் போல் 01/10/2020 அன்று மாலை சுமார் 06.15 மணிக்கு சாமி கும்பிட சென்றார். பத்மினியும் அவரது இளைய மகள் பிரசித்தாவும் பக்கத்து அறையில் வேலை செய்து கொண்டிருந்தார்கள் அப்போது திடீர் என்று பாப்பா, பாப்பா என்று அலறியது சத்தம் கேட்டு அம்மாவும், மகளும் ஓடிச் சென்று பார்த்த போது பிரஹதாம்பாள் அவர்கள் மீது சூடத்தட்டு விழுந்து சீலையில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடனே பக்கத்திலிருந்த வாளியில் உள்ள தண்ணீரை ஊற்றியும், துணியை வைத்தும் தீயை அணைத்தனர், பின்னர் பத்மினியின் கணவருக்கு போன் செய்து அவர் வந்ததும், 108 ஆம்புலன்ஸுக்க போன் செய்தார் ஆம்புலன்ஸ் வந்ததும் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்து வி்ட்டு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளார்கள். இருப்பினும் அம்மாவின் இறப்பில் எந்த வித சந்தேகமும் இல்லை இருப்பினும் அம்மாவின் இறப்பு சம்பந்தமாக சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டி 01/10/2020 அன்று இரவு 8 மணிக்கு காவல் நிலையம் வந்து புகார் அளித்து, அதன்படி ஆய்வாளர் உத்தரவின்படி, சார்பு ஆய்வாளர் திரு. பாண்டியராஜன் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published.