மதுரை, செல்லூரில் கோபத்தில் மனைவி தாய் வீட்டிற்கு சென்றதால், கணவன் அழைத்தும் வராததால் விரக்தியில் கணவன் தூக்குப் போட்டு தற்கொலை.
மதுரை, செல்லூர், புதுப் பள்ளிவாசல் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர் திருகுமரன், வயது 32, இவரது மனைவி தேவி ஈஸ்வரி, கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக கோபித்துக் கொண்டு பத்து நாட்களுக்கு முன்பு தன் தாய் வீட்டிற்கு சென்று, பத்து நாட்களாக தாய் வீட்டிலேயே வசித்து வந்தார். இதற்கிடையை கணவன் தன் மனைவிக்கு போன் செய்து உடன் வந்து விடு தனி குடித்தனம் நடத்தலாம் என்று தேவி ஈஸ்வரியை அழைத்துள்ளார், ஆனால் தேவி ஈஸ்வரி கணவரோடு வருவதற்கு மறுத்து விட்டார், இதனால் மனமுடைந்த கணவர் திருகுமரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக செல்லூர் காவல் துறையினர் தீவிரமாக விசாரனை நடத்தி வருகின்றனர்.
கோபத்தில் தாய் வீட்டிற்கு சென்ற மனைவி, கணவன் அழைத்தும் வராததால் மனமுடைந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
