மூன்று காவலர்கள் பல்வேறு காரணங்களில் உயிரிழந்தனர். காக்கியின் குடும்பம் எங்கள் குடும்பம் என்று 2013 பேட்ஜ் காவல் நண்பர்கள்
ஒன்றிணைந்து நிதியுதவி வழங்கியுள்ளனர்.
தமிழ்நாடு காவல் துறையில் 2013 பேட்ஜ் சேர்ந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் பாஸ்கரன் அவர்கள் அம்மை நோயாலும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் மின்ஹாஜூதீன் அவர்கள் கொரானா தொற்றாலும் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் வெங்கட்ராமன் அவர்கள் சிறுநீரக பிரச்சினையாலும் ஆகஸ்ட் மாதம் உயிரிழந்தனர்.
இந்த மூன்று காவலர்களுக்கு சக காவலர்களான 2013 ல் பணியில் சேர்ந்த அனைத்து காவலர்களும் சமூக வலைதளமான டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் தளங்களில் உதவி கேட்டு ஏறக்குறைய 4000 நண்பர்கள் அவர்களுக்கு நிதி உதவி செய்து சுமார் 30 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிதி உதவி செய்தனர்.
அந்த தொகையை 3 நண்பர்களுக்கும் பிரித்துக் கொடுத்தனர்.
சூழ்நிலை கருத்தில் கொண்டு இதில் விருதுநகர் மாவட்ட காவலர் பாஸ்கரன் அவர்களுக்கு 4 லட்சம் ரூபாயும் திருப்பூர் மாவட்ட காவலர் மின்ஹாஜூதீன் அவர்களுக்கு 14 லட்சம் ரூபாயும் தர்மபுரி மாவட்ட காவலர் வெங்கட்ராமன் அவர்களுக்கு 12 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயும் இன்று(11/10/2020) அவர்கள் குடும்பத்தை சந்தித்து
சக காவலர்கள் ஒன்றினைந்து நிதி உதவி செய்தனர்.
இதனால் பாதிக்கப்பட்ட நண்பர்களின் குடும்பத்தினர் மன ஆறுதல் அடைந்தனர்.
காவலர்களை இழந்து வாடும் அவர்கள் குடும்பத்துக்கு
தமிழக அரசு மற்றும் காவல்துறை சார்பில் வழங்கப்படும் அனைத்து உதவிகள் கிடைத்த நிலையிலும் தங்களுடன் பணிபுரிந்த
சக காவலர்கள் ஒன்றினைந்து நிதி உதவி செய்து அவர்களின் குடும்பத்தினரின் எதிர்காலத்தை நல்ல முறையில் உருவாக்கி கொடுத்துள்ளார்கள்.
இதனைக் கண்ட அனைத்து காவலர்களின் மனதிலும் ஒரு நல்ல நம்பிக்கையை உருவாக்கியுள்ளது .
தாம் இல்லையென்றாலும் தம்முடைய குடும்பத்தை காப்பாற்ற சக காவலர்கள் இருக்கிறார்கள் என்று மன நிறைவுடன் காவல் துறையில் பணியாற்றி வருகிறார்கள்.