குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர சென்னை பெருநகர காவல் அதிரடி. புளியந்தோப்பு மாவட்டம், எம்.கே.பி.நகர் சரகத்தில் 7 கொலை வழக்குகள் மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்கில் 17 நாட்கள் முதல் 50 நாட்களுக்குள் எதிரிகள் மீது குற்றப்பத்திரிகை (Charge Sheet) தாக்கல் செய்து நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் .
எம்.கே.பி நகர் சரக காவல் உதவி ஆணையாளர் திரு.G. அரிகுமார் தலைமையிலான காவல் குழுவினர் எம்.கே.பி.நகர் சரகத்தில் நடந்த 7 கொலை வழக்குகள் மற்றும் 1 கொலை முயற்சி சம்மந்தப்பட்ட வழக்குகளில் P-3 வியாசர்பாடி காவல் நிலைய கொலை வழக்கினை 17 நாட்களுக்குள்ளும், P-5 எம்.கே.பி.நகர் காவல் நிலைய 1 கொலை மற்றும் 1 கொலை முயற்சி வழக்குமற்றும் P-6 கொடுங்கையூர் காவல் நிலைய 2 கொலை வழக்குகள் ஆகிய 4 வழக்குகளிலும் 30 நாட்களிலும், இதர 3 கொலை வழக்குகளில் முறையே 40, 45 மற்றும் 50 நாட்களிலும் நீதிமன்றத்தில் எதிரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். விரைவாக புலன்விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதுடன், சம்பவம் நிகழ்ந்த 17 நாட்களிலிருந்து 50 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையினை விரைவாக தாக்கல் செய்து சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை . சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் இன்று (13.10.2020) நேரில் அழைத்து வெகுமதி வழங்கி வெகுவாகப் பாராட்டினார்.
