என்தேசம் என்மக்கள் ஒருவரும் மடியகூடாது என்ற நல்நோக்கில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் துரைப்பாக்கம் போக்குவரத்து ஆய்வாளர் ஐயா திரு.வெங்கடேஷன் அவர்கள்
O.M.R பெருங்குடி அப்பொல்லோ மருத்துவமனை சிக்னலில் அரசு ஊழியர் தனியார் ஊழியர் மற்றும் பாதசாரிகள் ஆட்டோ ஓட்டுனர்கள் வாகன ஓட்டிகள் பெரியோர்கள் ஆகிய அனைவரையும் அன்பாகவும் மரியாதையாகவும் சமூக இடைவெளி விட்டு நிழலில் அமரவைத்து முதலில் ஒவ்வொருவருக்கும் பிஸ்கட் தண்ணீர் கொடுத்து
முரட்டு கொரோனாவை விரட்டும் பேச்சால் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீட்டை விட்டு வெளியில் வரும்போது முககவசம் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்றும் சாலையை கடக்கும் போது சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் தன் குடும்பத்துக்கு தன்னுடைய உயிர் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்த பின் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டும் என்றும் தன் அனுபவத்தின் மூலமாக நன்மையான அறிவுரைகளையும் சாலை குறியீடு ,நடைமேம்பாலம் ஆகியவற்றை முறையாக பயன்படுத்த வேண்டும் என்றும் நின்று கவனித்து பாதுகாப்பாக செல்லவேண்டும் என்றும் மக்கள் புரியும் படியாக ஒலிபெருக்கி மூலமாகவும் துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் இசை வாத்தியங்கள் மூலமாகவும் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினார் துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.வெங்கடேஷன் அவர்கள் . அதுமட்டுமின்றி பொதுமக்கள் போன்று போக்குவரத்து காவலர்களுக்கும் உடல்வலிமைக்கு ஊட்டச்சத்து உணவும் மன அழுத்தத்திற்கு யோகாபயிற்சி பற்றியும் நல்ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.சாலையில் ஊனமுற்றோர் முதியோர் போன்றோர்க்கு சாப்பாடு தண்ணீர் ஆகியவற்றை தன்னுடைய சொந்த செலவில் கொண்டு வழங்கி வருகிறார்.இப்படிப்பட்ட நல்ல செயல்களை இரவு பகல் பாராமல் தன்னுடைய குடும்பத்தையும் மறந்து சரியான நேரத்தில் உணவு சாப்பிடாமல் பொதுமக்களுக்கு சேவையாக செய்யாமல் தியாகமாக செய்துவருகிறார் துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.வெங்கடேஷன் அவர்கள்.ஐயா அவர்களுடன் இணைந்து திரு.ஆனந்குமார் போ.வ.கா.உதவி ஆய்வாளர் மற்றும் HC காவலர்களும் ஒன்று சேர்ந்து கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.என்றென்றும் மக்கள் பணியை தொடர்ந்து செய்வேன் என்று உறுதியளிக்கிறார்.