கொரோனா விழிப்புணர்வில் மனித உயிரைக் காக்கும் மாமனிதர் செம்மஞ்சேரி போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.சுகுமார் அவர்கள்
செம்மஞ்சேரி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள சிக்னல் மற்றும் சோழிங்கநல்லூர் சிக்னலில் பாதசாரிகள் ஆட்டோ ஓட்டுனர்கள் வாகன ஓட்டிகள் பெரியோர்கள் ஆகியோர்களுக்கு இலவசமாக முககவசம் கிருமி நாசினி போன்றவற்றை வழங்கிய பின்னர் மக்களிடம் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும் இருமல் தும்மல் வந்தால் கர்ச்சிப் பயன்படுத்தவேண்டும் என்றும் காய்ச்சிய குடிநீர் பருகவேண்டும் என்றும் ஆரோக்கியமான உணவை உண்ணவேண்டும் என்றும் வெளியில் இருந்து வீட்டுக்குள் நுழைவதற்குமுன் சோப்பு போட்டு கைகழுவ வேண்டும் என்றும் பல நன்மையான அறிவுரைகளை வழங்கினார். மக்கள் புரியும் படியாக ஒலிபெருக்கி மூலமாகவும் துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் இசை வாத்தியங்கள் மூலமாகவும் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினார் செம்மஞ்சேரி போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.சுகுமார் அவர்கள்.இதுமட்டுமன்றி தன்னுடைய சொந்த செலவில் சாலை ஓரங்களில் இருக்கும் ஆதரவற்றோருக்கு முககவசம் உணவு பொட்டலங்கள் மருந்துகள் போன்றவைகளை இலவசமாக வழங்கி வருகிறார்.பொதுமக்களை போன்று காவலர்கள் பயன்படும் வகையில் ஊட்டச்சத்து உணவான முட்டை பழங்கள் ஆகியவையும் கபசூர குடிநீர் மற்றும் நல்ல உடற்பயிற்சியும் செய்யும் படி நன்மையான அறிவுரைகளை வழங்கி வருகிறார்..இப்படி இரவு பகல் பாராது மக்களின் வாழ்வுக்காக தன்னுடைய குடும்பத்தையும் மறந்து சரியான நேரத்தில் உணவு சாப்பிடாமல் பொதுமக்களுக்கு நேர்மையான முறையில் அன்பாகவும் மரியாதையாகவும் சேவையாக செய்யாமல் தியாகமா செய்துவருகிறார் செம்மஞ்சேரி போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.சுகுமார் அவர்கள்.இவருடன் இணைந்து திரு.பழனி போக்குவரத்து உதவி ஆய்வாளர் ,திரு. செல்வராஜ் உதவி ஆய்வாளர் ,திரு.குமார் உதவி ஆய்வாளர் G.Rமுருகன் HC மற்றும் பேட்ரிக் HCஆகிய அனைவரும் கொரோனா விழிப்புணர்வுக்காக பொதுமக்களுக்காக தினம்தோறும் சேவைசெய்யாமல் தியாகமாக தங்களை அற்பணித்துகொண்டுள்ளனர்.