மகத்துவமான மனித உயிரைக் காக்கும் கொரோனா விழிப்புணர்வில் மடிப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.மகேஷ் பத்மநாபன் அவர்கள்
சென்னையில் அதிவேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் உயிர் எண்ணிக்கை அளவு அதிகமாகும் நிலையில் மடிப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.மகேஷ் பத்மநாபன் அவர்கள் ஈச்சங்காடு மற்றும் காமாட்சி மருத்துவமனை சிக்னலில் வரும் பாதசாரிகள்,ஆட்டோ ஓட்டுனர்கள், வாகன ஓட்டிகள், பெரியோர்கள் ஆகிய அனைவருக்கும் இலவசமாக முககவசம் ,கிருமி நாசினி வழங்கியும் பதாகைகள் மூலமாகவும் ஒலிபெருக்கி மூலமாகவும் துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் இசை மற்றும் நடனமூலமாகவும் நாடக மூலமாகவும் மக்களிடம் அன்பாகவும் மரியாதையாகவும் கொரோனா விழிப்புணர்வை பற்றி நன்மையான அறிவுறைகளையும் வழங்கினார்.அதுமட்டுமல்லாமல் ஊட்டச்சத்து உணவு உண்ணும் படியாகவும் உடற்பயிற்சி செய்யும்படியாகவும் சாலை விதிகளைப் எப்படி சரியாக பயன்படுத்தவேண்டும் என்பதனை மிகவும் தெள்ளத் தெளிவாக மக்கள்புரியும் வண்ணமாக தன்னுடைய சொந்த செலவில் மக்கள் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற நல்எண்ணத்தோடு செய்துவருகிறார்.அதுமட்டுமன்றி சாலையோரத்தில் பசியோடு இருக்கும் மக்களுக்கு தினமும் உணவு தண்ணீர் மருந்துகள் போன்றவை வழங்கி வருகிறார்.இப்படி இரவு பகல் பாராமல் தன்னுடைய குடும்பத்தையும் மறந்து சரியான நேரத்தில் உணவு சாப்பிடாமல் பொதுமக்களுக்கு சேவை என்று கருதாமல் தியாகமாக செய்யும் மனித நேயமிக்க மனிதராகவும் காவல்துறையினருக்கு உதாரணமாக விளங்கி வருகிறார் ஐயா திரு.மகேஷ்பத்மநாபன் அவர்கள் மற்றும் இவருக்கு உதவியாக திரு.பாலன் HC அவர்களும் சிறப்பாக மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.