மதுரை, பைக்கரா, பகுதியில் முன்னாள் ஜனாதிபதியின் கார் ஓட்டுநர் ஊரடங்கால் வறுமை,தூக்கிட்டு தற்கொலை
மதுரை மாநகர், சுப்பிரமணியபும் C2, காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான பைக்கரா,முத்துராமலிங்கபுரம் 7 வது தெருவில் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் செல்வம் மகன் ராஜேஸ் வயது 36, இவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன் சோலையழகுபுரத்தை சேர்ந்த S.K.சேதுராமன் மகள் அருள்நந்தினிக்கு திருமணம் நடந்தது, இவர்களுக்கு குழந்தைகள் இல்லை, இவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களிடம் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார், அவரின் மறைவிற்கு பிறகு இவர் சொந்தமாக கார் வாங்கி தொழில் செய்து வந்தார், இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் போதிய வருமானம் இல்லாம் வறுமையில் வாடினார்.கடந்த 11 ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், இவரின் உறவினர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் சொல்லாமல் உடலை எரிக்க ஏற்பாடு செய்தனர், தகவல் அறிந்த சுப்பிரமணியம் காவல் ஆய்வாளர் திருமதி. கலைவாணி அவர்கள் உடன் சென்று தடுத்து நிறுத்தி உடலை பிரேத பரிசோதனை செய்ய அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர், மேற்கொண்டு தற்கொலை செய்து கொண்ட ராஜேஸ் அவர்களின் தாயார் திருமதி வசந்தா அவர்கள் தன் மகன் இறப்பில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு கூறி புகார் மனு கொடுத்துள்ளார், அதன்படி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.