காவலர்கள் குழந்தைகளுக்கான கொரோனா விழிப்புணர்வு குறித்த ஓவிய போட்டியில் சிறப்பாக ஓவியங்கள் வரைந்த குழந்தைகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி ஊக்குவித்த, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் உத்தரவுபடி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி அர்ச்சனா அவர்கள் அறிவுறுத்தலின் பேரில், ஊரக உட்கோட்ட பகுதியில் பணிபுரியும் காவலர் குழந்தைகளுக்கு கொரானா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவர்களுக்கு வீட்டிலிருந்தபடியே கொரோனா விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்து அனுப்பும் படி துணை காவல் கண்காணிப்பாளர் கேட்டுக்கொண்டார்..
இதில் கடந்த 15ஆம் தேதியன்று நடைபெற்ற போட்டியில் முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு என தரமாக பிரித்து மொத்தம் 23 குழந்தைகளை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி ஊக்குவித்தார்.
