மதுரை புற நகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித்குமார் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன
மதுரை புறநகர் , மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித்குமார் அவர்களுக்கு காவல் துறையினர் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்து ஒவ்வொரு காவல் நிலையத்திலிருந்தும் ரோல் கால் நேரம் காலை ஏழு மணி என்பது நடைமுறையில் இருந்தது.
இதனால், போலீசார் பணிக்கு வருவதற்கு முன் அதிகாலையில் எழுந்து தங்கள் கடமைகளை முடித்துக் கொண்டு பணிக்கு வருவது மிகவும் சிரமமாக இருந்தது, இதில் குறிப்பாக பெண் போலீசார் மிகவும் சிரமப்பட்டனர், மேலும் திருமணமான பெண் போலீசார் தங்கள் கணவரை மட்டுமின்றி தன் குழந்தைகளையும் கவனித்து அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் வேறு தேவைகளையும் அவசரஅவசரமாக நிறைவேற்றி கொடுத்து விட்டு பணிக்கு வர வேண்டியிருந்தது, இது மிக பெரிய சிரமத்தை அவர்களுக்கு அளித்து வந்தது, இது காலங்காலமாக தொடர்ந்து வந்தது.
இந்த நடைமுறை சில மாதங்களுக்கு முன் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முதல் ரோல் கால் நேரத்தை ஒன்றரை மணி நேரம் தாமதமாக மாற்றிக் கொடுத்தார். இதனால் அனைத்து போலீசாரும் பயனடைந்தனர், தற்போது அதே நடைமுறையை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித்குமார் அவர்கள் 7 மணி முதல் இருந்த ரோல் கால் நேரத்தை 8.30 ஆக மாற்றிக் கொடுத்திருக்கிறார். இந்த நடைமுறை இன்றிலிருந்து அமுலுக்கு வந்துள்ளது, இதனால் பெரிதும் மகிழ்வது பெண் போலீசார், மற்றும் அனைத்து போலீசாரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவிக்கின்றனர். அனைத்து போலீசார் சார்பாக புறநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு தங்களின் பாராட்டுகளை தெரிவிக்கின்றனர்.
இந்த நடைமுறையை அனைத்து மாவட்ட காவல் நிலையங்களிலும் நிறைவேற்றி தந்து மாவட்ட காவல் கண்காணிப்பு அதிகாரிகள் அனைவரும் பாராட்டுகளை பெற வேண்டும் என போலீசார் விரும்புகின்றனர்.
