பெயர் மட்டுமே தெரிந்த மூதாட்டி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பலன் இன்றி இறப்பு, மதுரை, விளக்குத் தூண் காவல் சார்பு ஆய்வாளர் விசாரணை.
அரசு மருத்துவ மனையில் கடந்த 21 ம் தேதி பகல் 3.15 மணியளவில் மதுரை கிழக்குச் சித்திரை வீதியில் நகரத்தார் மண்டபத்தின் அருகில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்த சீனியம்மாள வயது சுமார் 70, அவர்கள் உடல் நலமில்லாமல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை நடந்து வரும் வேளையில், சிகிச்சை பலன் அளிக்காததால் கடந்த 23 ம் தேதி இறந்து விட்டார், இது விசயமாக மருத்துவ அதிகாரிகள் அந்த பகுதி கிராம நிர்வாக அதிகாரி திருமதி. முத்துமொழி அவர்களுக்கு தகவல் அளித்தார்கள், தகவல் அறிந்த முத்துமொழி, 23 ம் தேதி காலை 10 மணியளவில் தலையாரி
ஜெயபாண்டி அவர்களுடன், மருத்துவமனை சென்று பார்த்து விட்டு, அதன் பின் மதுரை விளக்கு தூண் B1, காவல் நிலையத்தில் மேற்படி மூதாட்டியின் இறப்பு சம்பந்தமாக சட்டப்படி விசாரணை நடத்த புகார் அளித்தார், மேற்படி புகாரின்படி காவல் ஆய்வாளர் திருமதி லோகேஸ்வரி அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. பாண்டியராஜன் அவர்கள் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார்
