17 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் வன்புணர்வு செய்த நபரை குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தில் கைது செய்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.
31.10.2020 திண்டுக்கல் மாவட்டம் விராலிப்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் வயது(40) என்பவர் தேனியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இது குறித்து சிறுமி நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரை தொடர்ந்து அம்மையநாயக்கனூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.லாவண்யா அவர்கள் விசாரணை செய்தார். விசாரணையில் வெங்கடேஷ் சிறுமியை திருமணம் செய்து பாலியல் வன்புணர்வு செய்தது உண்மை என தெரியவந்ததால் அவர் மீது குழந்தை திருமண தடுப்புச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
