சிறுவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையிலும், கல்வித் திறனை மேம்படுத்தும் நோக்குடன் காவல் நிலையங்களில் போலீஸ் பாய்ஸ் கிளப்…
02.11.2020 திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் சிறுவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையிலும் கல்வி திறனை மேம்படுத்தவும் காவல் நிலையங்களில் போலீஸ் பாய்ஸ் கிளப் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் சிறுவர்கள் தங்கள் விளையாட்டு திறனை மேம்படுத்திக் கொள்ள ஏதுவாக பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுவர்களின் சிந்தனையை அதிகரிக்கும் வகையிலும் படிக்கும் ஆர்வத்தை உண்டாக்கும் நோக்குடன் பல்வேறு விதமான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனை சிறுவர்கள் ஆர்வமுடன் எடுத்து படிக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையம், நகர் தெற்கு காவல் நிலையம், நத்தம், அம்பாத்துரை, நிலக்கோட்டை, வத்தலகுண்டு, பழனி அடிவாரம், கீரனூர், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், வடமதுரை ஆகிய காவல் நிலையங்களில் தற்போது பாய்ஸ் கிளப் உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. வருங்காலங்களில் அனைத்து காவல் நிலையங்களிலும் பாய்ஸ் கிளப் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் இதனை அப்பகுதி சிறுவர்கள் பயன்படுத்தி கல்வியிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும் என்றார்.
