சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் உட்பட 8 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டு
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் உட்பட 8 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினத்தில் 17.10.2020 முதல் 26.10.2020 வரை நடைபெற்ற முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் போது சட்டம் ஒழுங்கு, குற்றம் மற்றும் போக்குவரத்து பணிகளை திறம்பட செய்த குலசேகரபட்டினம் காவல் ஆய்வாளர் ராதிகா, திருச்செந்தூர் உட்கோட்ட தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் பாஸ்கரன், திருச்செந்தூர் போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் வேல்முருகன், திருச்செந்தூர் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமைக் காவலர் தாமஸ் மேத்யூ மற்றும் குலசேகரபட்டினம் காவல் நிலைய காவலர் தங்கபாண்டியன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மளவராயநத்தம் கிராமத்தை சேர்ந்த போக்கிரி முத்து என்பவர் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட தோழப்பன்பண்ணை பகுதியில் ஆயுதத்துடன் சுற்றிதிரிந்தவரை கைது செய்து வழக்கு பதிவு செய்ய உதவியாக இருந்த ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் தனிப்பிரிவு முதல் நிலைக் காவலர் சுப்பிரமணியன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
காவல் ஆய்வாளர் உட்பட 8 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் கோபி, செல்வன், பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, மற்றும் பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
