சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்த 2 பெண்கள் கைது. 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்
04.11.2020 திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.கவிதா அவர்கள் தலைமையில் பயிற்சி சார்பு ஆய்வாளர் திரு.ரவி சங்கர் அவர்கள் முதல்நிலை காவலர் திரு.ஜெய் ஸ்டாலின், காவலர் திரு.ரவி ஆகியோர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இச்சோதனையில் வேடசந்தூர் அண்ணாநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த சகுந்தலா வயது (34) என்பவரை கைது செய்து விசாரணை செய்ததில் அவர் திண்டுக்கல் N.G.O காலனியைச் சேர்ந்த சத்யா வயது (28) என்பவரிடம் கஞ்சா வாங்கியதாக தெரிவித்தார். இதையடுத்து சத்யா வீட்டில் சோதனை செய்ததில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து இரண்டு பெண்களையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். இதில் முக்கிய குற்றவாளியாக விக்னேஷ் வயது(26) என்பவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.