போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த காவல்துறையினர் .
05.11.2020 திண்டுக்கல் மாவட்டம். சத்திரப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்(16.10.2020) அன்று சிறுவர்களை மிரட்டி தகாத வார்த்தைகளால் பேசி, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சாமியார்புரத்தைச் சேர்ந்த நான்கு நபர்களை நிலைய ஆய்வாளர் திரு.முருகேஸ்வரி அவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.
இந்நிலையில் 4 நபர்களில் சங்கர் வயது(20) மற்றும் நவீன் வயது(24) ஆகிய இருவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி .ரவளி பிரியா இ.கா.ப அவர்களின் பரிந்துரையின் படி மாவட்ட ஆட்சியர் திருமதி.விஜயலட்சுமி, இ.ஆ.ப அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
உத்தரவைத் தொடர்ந்து காவல் நிலைய போலீசார் திண்டுக்கல் கிளைச் சிறையில் இருந்து சங்கர் மற்றும் நவீனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.