கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை
06:11:2020 தேனி மாவட்ட முழுவதும் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு.E.சாய் சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில்
வருஷநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மோப்பநாய் வெற்றி உதவியுடன் கஞ்சா மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்துள்ளார்களா அதிரடி சோதனை நடத்தப்பட்டன.
தேனி மாவட்டம் முழுவதும் மோப்ப நாய் வெற்றி உதவியுடன் கஞ்சா மற்றும் போதை பொருள் ஒழிக்க தேனி மாவட்ட காவல்துறையினர் எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
