தனியார் எம்.சாண்ட் நிறுவன அலுவலகத்தில் ரூ.60,000 பணம் மற்றும் CCTV Hard disk திருடி சென்ற 5 நபர்களை துரத்திச் சென்று பிடித்த பழனி தாலுகா காவல்துறையினர் .
06.11.2020 திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆண்டிப்பட்டியில் இயங்கி வரும் தனியார் எம்.சாண்ட் நிறுவன அலுவலகத்தில் நேற்று இரவு மர்ம நபர்கள் அங்கிருந்த ரூ.65,000 பணம் மற்றும் CCTV hard disk யை திருடி செல்லும்போது அலுவலக மேற்பார்வையாளர் பார்த்து இதுகுறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் திரு.வீரகாந்தி அவர்களிடம் தொலைபேசியில் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து ஆய்வாளர் அவர்கள் இரவு ரோந்து பணியில் இருந்த சார்பு ஆய்வாளர் திருமதி.யோகராணி அவர்கள் மற்றும் காவலர் திரு.முத்துக்குமார் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கவே விரைந்து சென்ற போலீசார் ஆண்டிபட்டி புதுமடை காலனி என்ற இடத்தில் திருடர்கள் தப்பி சென்ற காரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் மேற்படி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் சிவகங்கையை சேர்ந்த சுரேஷ் (30), ராஜ்குமார் (36), பிரபு (29), சண்முகராஜ் (51), ராஜீவ் (27) ஆகியோர் என தெரிய வந்தது இதையடுத்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து ரூ. 65,000 பணம் மற்றும் CCTV hard disk, தப்பி செல்ல பயன்படுத்திய கார் ஒன்றும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
