விருதுநகர் மாவட்டம்:-
மனிதாபிமானம் என்பது அனைவருக்கும் பொதுவானதுதான்…
அந்த வரிசையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மழையால் பாதிக்கபட்ட வீடு மற்றும் முகவரி இல்லாத பெரியவரை காப்பாற்றியுள்ளார்.
மேலும் அந்த வயது முதிர்ந்தவரை காவல் துறை வாகனத்தில் ஏற்றி அருப்புக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்று அவரது உயிரை காப்பாற்றியுள்ளார் ஆய்வாளர் பாலமுருகன்.
மேற்கொண்டு அந்த பெரியவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
முகவரி இல்லாத முதியவரை காப்பாற்றிய அருப்புக்கோட்டை நகர் காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்களுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
இவை மட்டும் இல்லாமல் கொரோனாவினால் ஊரடங்கு ஏற்பட்டபோது அருப்புக்கோட்டையில் உண்ண உணவு இல்லாமல் வீடு வாசலின்றி தவித்தவர்களுக்கு தொடர்ந்து மூன்று வேளையும் பசியாற உணவளித்தவர் மற்றும் பேரும் புகழுக்கும் விரும்பாதவர் என்றே சொல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் பணியில் அயராது பணியாற்றிவரும் ஆய்வாளர் அவர்களின் பணிகள் மென்மேலும் மிளிர போலீஸ் இ நியூஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.