பொதுமக்களை தேடி அவர்களின் கிராமங்களுக்குச் சென்று குறைதீர்க்கும் முகாம் நடத்தி அவர்களின் புகார்களை பெற்று விசாரணை செய்துவரும் ஒட்டன்சத்திரம் உட்கோட்ட காவல்துறையினர் .
09.11.2020 திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அசோகன் அவர்கள் தலைமையில் ஒட்டன்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ஸ்ரீனிவாசகன் அவர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு.கணேசன் ஆகியோர் தும்பச்சம்பட்டியில் பொதுமக்களை ஒன்றிணைத்து அவர்களின் நீண்ட கால கோரிக்கை மனுக்கள் மற்றும் அனைத்து விதமான புகார் மனுக்களை பெற்றனர். இதுகுறித்து விரைவில் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தனர்.
மேலும் கிராமப்புறங்களில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீது இழைக்கப்படும் அநீதிகள் குறித்தும் அவற்றில் இருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். தற்போது பண்டிகை காலம் என்பதால் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்லும் படியும், கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் படியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
