மதுரையில் சுத்தமான காவல் நிலையங்களுக்கு விருது
மதுரை மாநகர் உள்பகுதியில் உள்ள சுத்தமான காவல் நிலையங்களுக்கு மதுரை காவல் ஆணையர் திரு பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்கள் விருதுகள் வழங்கி கெளரவித்தார்.
மதுரை மாநகர் பகுதியில் உள்ள சுமார் 24 காவல் நிலையங்களை காவலர்கள் எந்த அளவிற்கு சுத்தமாக வைத்துள்ளார்கள் என்பதற்காக இன்று மதுரை மாநகர காவல் துறை ஆணையர் காவல் நிலையங்களுக்கிடையை போட்டி நடத்தினார். இதில் மதுரை ஜெய்ஹிந்த்புரம் மற்றும் கூடல்புதூர் காவல் நிலையங்கள் முதல் இரண்டு இடத்தை தட்டிச் சென்றது, மூன்றாவது இடத்தை 19 ஆண்டுகள் பழைமையான சுப்பிரமணியபுரம் காவல் நிலையம் தட்டிச் சென்றது.
மேலும் காவல் நிலையத்தை சுத்தமாக முறையாக பராமரித்த காவலர்கள், காவல் ஆய்வாளர்களையும், மதுரை மாநகர காவல் துறை ஆணையர் வெகுவாக பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். அதுமட்டுமில்லாமல் ஜெய்ஹிந்துபுரம் மற்றும் கூடல்புதூர் காவல் நிலையங்கள் இரண்டுமே புதிதாக திறக்கப்பட்ட காவல் நிலையங்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
