புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையின் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு
புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சார்பாக, காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட இருசக்கர வாகன பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர். லோக. பாலாஜி சரவணன் அவர்கள் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இவ்விழிப்புணர்வு பேரணியில் சாலைவிதிகளை கடைபிடிப்பதன் அவசியம் குறித்தும், தலைக்ககவசம் மற்றும் சீட்பெல்ட் அணிவதன் பயன்கள் குறித்தும்,மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்க கூடாது எனவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இப்பேரணியானது புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி, அண்ணா சிலை வழியாக புதுக்கோட்டை முக்கிய வீதிகளில் வலம் வந்து கீழராஜ வீதியில் பேரணி முடிக்கப்பட்டது.
