மதுரையில் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள்.
காவல் ஆணையாளர் அவர்களின் அதிரடி அறிவிப்பு
மதுரை மாநகரில் ரவுடிகளை கட்டுப்படுத்த 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன, என மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தகவல் தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக பொது இடங்களில் அடிதடி, கொலை, கொள்ளை, சம்பவங்கள் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது, குறிப்பாக முன்னாள் ரவுடிகள், மற்றும் இதற்கு முன்பு குற்றச் செயலில் ஈடுபட்டவர்களே மீண்டும், மீண்டும் இது போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். அவர்களை கட்டுப்படுத்தும் விதமாக மதுரை மாநகர் பகுதியில் 7 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் அனைவரும் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்புடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் மதுரை மாநகர் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மதுரையில் 69 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர், மதுரை மாநகரில் கடந்த 10 ஆண்டுகளில் பல் வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகளின் பட்டியல் கணக்கெடுக்கப்பட்டது, கடந்த 11 மாதத்தில் மட்டும் சுமார் 69 ரவுடிகள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என மதுரை காவல் துறை தரப்பில் தகவல் கூறப்பட்டுள்ளது.
செய்தி தொகுப்பு
M.அருள்ஜோதி
மாநில செய்தியாளர்